சென்னை: மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் கடல்பாசி பூங்காவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய கடல் பகுதியில் 844 வகையான கடல் பாசிகள் உள்ளன. இவற்றில் 60 இனங்கள் வணிகரீதியாக முக்கியமானவை. இதில்10 கடல் பாசி இனங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் கடல்பாசி வளர்ப்பை மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதார நடவடிக்கையாக ஊக்குவிக்க மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து 1,926 மீனவப் பெண்கள் கடல் பாசி வளர்ப்பை மேற்கொள்ள 16,262 கடல்பாசி மிதவைகள் மற்றும் வளர்ப்பு கயிறுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தமிழத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 10,000 மெட்ரிக் டன் கடல்பாசி வளர்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
» இந்திய - இலங்கை மீனவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை: தமிழக அரசு கோரிக்கை
» தென் தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்த பூங்கா 2 மையங்களாக அமைக்கப்படவுள்ளது. முதல் மையத்தில் திசு வளர்ப்பு ஆய்வு கூடம், இளம் தாவர வளர்ப்பு அலகு, வெளிப்புற கடல்பாசி விதை வளர்ப்பு மையம், பயிற்சி மையம், உலர் தளங்கள் ஆகிவைகள் அமைக்கப்படவுள்ளது.
2-வது மையத்தில் கடல்பாசி பதனிடும் தொழிற்சாலை, நிர்வாக கட்டிடம், புதிய கண்டுபிடிப்புகள் மேம்பாட்டு மையம், தொழில் முனைவோர் உருவாக்க மையம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago