சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும்நடைமுறையை, மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு விடுப்பு விதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியம் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த 2020-ம்ஆண்டு ஏப்ரல் முதல் ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் கிடையாதுஎன்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த கால அளவு முடிந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை பெற்றுக் கொள்ளஅரசு ஊழியர்கள் தயாராக இருந்தனர். ஆனால், தற்போது அடுத்த உத்தரவு வரும் வரை ஈட்டிய விடுப்பை பணமாகப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுஅறிவித்து, அதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என அரசு ஊழியர்கள் நம்பியிருந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago