கொடைக்கானலில் வாகனங்களுடன் மறியல்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளம், பெரும்பள்ளம் பகுதிக்கு செல்லக் கூடிய சாலைகள் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்கள் வாகனங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபள்ளம், பெரும்பள்ளம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள் கடந்த சில வருடங்களாக சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

சாலையை சீரமைக்காததை கண் டித்து அப்பகுதி மக்கள் சாலைகளின் குறுக்கே தங்களது வாகனங்களை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

தகவல் அறிந்துவந்த போலீஸார் மற்றும் வில்பட்டி ஊராட்சி நிர்வா கத்தினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியர் முருகேசன் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வட்டார வளர்ச்சி அலு வலரிடம் கூறி விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்