நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராம நவமி (ராமரின் பிறந்த தினம்) இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பிஹாரின் முசாபர்நகர் மாவட்டத்தின் முகமத்பூர் கிராமத்தில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது அங்கிருந்த ஒரு மசூதியின் மேல் காவிக் கொடி ஏற்றப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இச்சம்வத்திற்கு நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுபோன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு பாஜக காரணம் எனக் கூறுபவர்கள் மண்டைக்குள் மூளையை வைக்க வேண்டும். இது அல்ல பாஜக. எங்கள் கட்சி இதனை ஊக்குவிப்பதில்லை. எங்களின் பிரதமர் மோடி சமத்துவம், வளம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
4 மாநிலங்களில் வன்முறை: நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஸ்ரீ ராமநவமி தினம் கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட்ம் மேற்கு வங்கம், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின்போது மோதல் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 10 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
தலாப் சவுக் மசூதியில் ஸ்ரீ ராமநவமி ஊர்வலம் நடந்த போதுஇரு பிரிவினர் கல்வீசித் தாக்கிகொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
குஜராத்தின் ஹிம்மத்நகரில் நடந்த ராமநவமி ஊர்வலத்தின் போது 2 பிரிவினர் மோதிக் கொண்டனர். அங்கு வந்த போலீஸ் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாட் நகரில் நடந்த ஊர்வலத்தின்போது ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், தடியடிநடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா, ஷிப்பூர், கர்கோனிக் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் சிலர் கற்களை வீசியதால் வன்முறை வெடித்தது. அங்கும்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதேபோல் ஜார்கண்ட் மாநிலம்லோகர் டகாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கல்வீச்சு சம்பவம் நிகழ்த்தப்பட்டதால் பலர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் பிஹாரில் நடந்த சம்பவத்திற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago