பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுச்சேரி, காரைக்காலில் வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: பிரான்ஸ் அதிபர் தேர்தலையொட்டி புதுச் சேரி, காரைக்காலில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 12 பேர் போட்டியிட்ட சூழலில் யாரும் பெரும்பான்மை பெறாவிட்டால் முதல் இருவர் இடையே வரும் 24-ல் இரண்டாவது சுற்று தேர்தல் நடக்கும்.

பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த பதவிக்கு 12 பேர் போட்டி யிடுகின்றனர். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும். நேற்று காலை 8 மணியளவில் தேர்தல் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வரிசை யில் நின்று அடையாள அட்டையை சரிபார்த்தபின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப் பட்டனர். பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரி, காரைக்கால், சென்னை உள்ளிட்ட நான்கு மையங்களில் நடந்தது.

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் இரு சுற்றுகளாக நடக்கிறது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியில் உள்ளனர். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறாவிட்டால் முதல் இரு இடங்களை பெறுவோர் இடையே இரண்டாவது சுற்று தேர்தல் வரும் 24-ம் தேதி நடக்கும். புதுச்சேரி, தமிழகம், கேரளத்தில் 4,564 பேர் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

புதுச்சேரியில் பிரெஞ்சு துணைத் தூதரகம், லிசே பிரான்ஸே பள்ளி ஆகிய இரு இடங்களில் வாக்குச்சாவடிகளும், காரைக்கால், சென்னையில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டி ருந்தன.

நேற்று இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குச்சாவடி மையங் களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரெஞ்சு துணைத் தூதர் லிசே டல்போர்ட் பரே பார்வையிட்டார்.

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்