கள்ளக்குறிச்சி: ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்தவேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு கூறியதையே கேட்காத நாங்கள், அமித்ஷா கூறுவதையா கேட்கப் போகிறோம் என கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் கள்ளக்குறிச்சியில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு பேசியது:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நேரு கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என தெரிவித்தார். நாடே கொந்தளித்தது, ஆனால் தமிழக மக்கள், எப்போது இந்தியைஏற்கிறார்களோ, அதுவரை இணைப்பு மொழியாக ஆங்கி லமே இருந்து கொள்ளட்டும் என்றார்.எங்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நேரு சொன்னதையே ஏற்காத நாங்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதையா கேட்கப் போகிறோம்?
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போகின்ற போக்கைப் பார்த்து பாஜகவினர் கதறிக் கொண்டு இருக்கின்றனர். சுவாமியை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்த பாஜகவிற்கு, திராவிட மாடல் அரசு வாய்ப்பு கொடுக்கவில்லை. தாலிக்கு தங்கம்திட்டம் என்பது தாலி கட்டும் போது கொடுக்க வேண்டிய திட்டம்.ஆனால் அப்போது கொடுக்கப்படா மல் தாலிகட்டி 4 ஆண்டுகள் கழித்து கொடுக்கப்படுகிறது. எனவேஅதனை மாற்றி படிக்கிற பெண் களுக்கெல்லாம் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் என்றார்.
இக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் உதயசூரியன், மணிகண்ணன், கள்ளக்குறிச்சி நகராட்சித் தலைவர் சுப்ராயலு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவ னேஸ்வரி பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago