“தூய பட்டுச் சேலைக்கு வழங்கப் படும் சில்க் மார்க் முத்திரை பட்டின் தரத்துக்கே அன்றி ஜரிகைக்கு அல்ல" என்று ‘சில்க் மார்க் ஆஃப் இந்தியா’ நிறுவனம் விளக்கமளித் துள்ளது. எனவே, சில்க் மார்க் முத்திரை இருந்தாலும், ஜரிகையின் தரத்தை அறிந்து நுகர்வோர் வாங்க அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
தனிப் பாரம்பரியம் மிக்க காஞ்சி பட்டுச் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள் ளது. இந்நிலையில், சில தனியார் கடைகளில், ஆரணி மற்றும் தர்மா வரம் பகுதி பட்டுகளை, காஞ்சி பட்டுச் சேலை என போலியாக விற்பனை செய்வதாக புகார் எழுந் துள்ளது. இதனால், தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக நெச வாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சில தனியார் விற்பனையாளர்கள் ‘சில்க் மார்க் ஆஃப் இந்தியா’ என்ற மத்திய அரசின் நிறுவனம் வழங்கும் சில்க் மார்க் முத்திரையை, போலி பட்டுச் சேலைகளில் பயன்படுத்தி, தூய பட்டுச் சேலைகள் என விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. சில்க் மார்க் முத்திரை அளிக்கப்படுவ தால், அதில் உள்ள ஜரிகையின் தரத்தை அறியாமல், 35 சதவீதம் வெள்ளி இழைகளை கொண்ட ஜரிகை என நம்பி நுகர்வோர் பட்டுச் சேலைகளை வாங்குகின்றனர்.
இத்தகைய பட்டுச் சேலையை மத்திய அரசின் கம்ப்யூட்டர் ஜரிகை பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்யும்போது போலி என தெரியவருகிறது. இதனால், நுகர்வோர் ஏமாற்றப்படுவதோடு காஞ்சி பட்டுகளின் பாரம்பரியத் துக்கும் களங்கம் ஏற்படுகிறது.
மேற்கண்ட போலி ஜரிகை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நுகர்வோர் சிலர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியிடப் பட்டது. இதன் பேரில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, மத்திய நெசவாளர் சேவை மையம் ஆகிய துறைகள் இணைந்து போலிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், “பட்டுச் சேலை களுக்கு தரப்படும் சில்க் மார்க் முத்திரை, பட்டின் தரத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே தவிர, ஜரிகையின் தரத்துக்கு அல்ல. அதனால், நுகர்வோர் ஜரிகையின் தரத்தை அறிந்து பட்டுச் சேலைகளை வாங்குமாறு” ‘சில்க் மார்க் ஆஃப் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் கூறி யுள்ளதாவது: சில்க் மார்க் முத்திரை என்பது, ஹோலோகிராமுடன் கூடிய 100 சதவீத தூய பட்டுக்கு உத்திரவாதமாக வழங்கப்படும் சான்று. தூய பட்டினால் தயாரிக் கப்பட்ட பட்டு பாவாடைகள், அங்கவஸ்திரம் உள்ளிட்ட பட்டாடைகளில் இந்த முத்திரையை பயன்படுத்தலாம். பட்டில் உள்ள ஜரிகைக்கு உத்திரவாதம் இல்லை.
அதனால், நுகர்வோர், கடைகளில் வாங்கும் பட்டு சேலைகளில் சில்க் மார்க் முத்திரை இருந்தாலும், ஜரிகையின் தரத்தை அறிந்து, பரிசோதித்து வாங்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago