சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுக்கு மாவட்டந்தோறும் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் விருப்பத்தின்படி, கட்சியின் தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சிக்காக, கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்.10) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர்.மேலும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் அவர்கள் போட்டியிட்ட பகுதியில் கிடைத்த அனுபவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
» பொருளாதார நெருக்கடி | இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு 3 குழந்தைகள் உட்பட 19 பேர் வருகை
» தமிழகத்தில் கரோனா XE திரிபு இல்லை; அச்சம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்த நிகழ்ச்சியின் முடிவில் வேட்பாளர்கள் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.தொடர்ந்து இதே போன்று தமிழகத்தின் மற்ற பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் பாராட்டுவிழா நடத்த செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி கட்சியின் மாநில துணைத்தலைவர் A. G.மவுரியா தலைமையில் நடைபெற்றது. மேலும் மாநிலச் செயலாளர்கள் முரளி அப்பாஸ், கிருபாகரன், வினோத், சஜீஸ், பிரகாஸினி, சினேகா மோகன் தாஸ் மற்றும் மாநகர மாவட்டச் செயலாளர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago