தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடிக்கு வரும் இலங்கை அதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வ்ருகிறது. இந்நிலையில், இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இன்று புதிதாக மேலும் 19 பேர் வந்துள்ளனர். அவர்களின் மூவர் குழந்தைகளாவர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் மக்கள் தினசரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும். சர்வதேச நிதியத்தை அணுகி இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து போராடி வருகின்றனர். அரசியல் நிலைத்தன்மை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அதிபருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் போராடி வருகின்றனர்
பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வருவது நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இன்று (ஏப்.10) மேலும் 19 பேர் வந்திருப்பதாக தனுஷ்கோடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
» தமிழகத்தில் கரோனா XE திரிபு இல்லை; அச்சம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
» ஓசூர் | தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உரிகம் வனச்சரகத்தில் வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைப்பு
ஏற்கெனவே இலங்கையிலிருந்து ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 நபர்கள் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் 3 குழந்தைகள் உள்பட 19 பேர் வந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago