நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி, மாநில தேர்தல் ஆணையம், தமிழக உள்துறைச் செயலர், டிஜிபிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுகஅமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்குகள் மீதான விசாரணையின்போது, ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்தப்படும். உரியபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும்’ என்று மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுதரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இத்தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இத்தேர்தல் நடத்தப்படவில்லை என்று கூறி சென்னைஅரும்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் 3-ம் நபராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும்முறையாக அமல்படுத்தவில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை திமுகவினர் கொடுத்ததாகவும், வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்றதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச் சீட்டுகளை சேதப்படுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகாரிகளும் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த தவறிய மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago