ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோதும் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி (45) என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே பேருந்து சென்றபோது ஓட்டுநர் பழனிசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் பேருந்து திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கியது. சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் பழனிசாமி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பேருந்தை மோதி நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
உடனடியாக பழனிசாமி மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஈரோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago