சின்ன வெங்காயம் விலை சரிவால் உணவகங்களில் தாராள பயன்பாடு: வாடிக்கையாளர்கள் உற்சாகம்

By செய்திப்பிரிவு

ஒரு மாத காலமாக தொடர்ந்து குறைவான விலையில் விற்பனையாகி வருவதால் உணவகங்களில் சின்ன வெங்காயத்தின் பயன்பாடு தாராளமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

விளைச்சல் நிலவரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.30 முதல் ரூ.100 வரையிலான விலையில் கடந்த 2 ஆண்டுகளாகவே சின்ன வெங்காயம் விற்பனை ஆகி வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 1-ம் தேதி தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் கிலோ ரூ.30-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 2-ம் தேதி கிலோ ரூ.24 ஆக சரிந்தது. அதைத் தொடர்ந்து படிப்படியாக கிலோ ரூ.14 வரை சரிவடைந்தது.

இவ்வாறு, சிறுசிறு விலை மாற்றங்களுடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கிலோ ரூ.20-க்கும் குறைவான விலையி லேயே சின்னவெங்காயம் விற்பனையாகி வருகிறது. விலைச்சரிவைத் தொடர்ந்து சாலையோரங்களில் ஆங்காங்கே திடீர் கடைகள் உருவாகி அவ்வப்போதைய விலை மாற்றத்துக்கு ஏற்ப, ‘5 கிலோ ரூ.100’, ‘ 6 கிலோ ரூ.100’, ‘7 கிலோ ரூ.100’ போன்ற காம்போ விலைகளில் சின்ன வெங்காய விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விலைச் சரிவு எதிரொலியால் உணவகங்களிலும் சின்ன வெங்காய பயன்பாடு தாராளமாக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து உணவகங் களின் வாடிக்கையாளர்கள் சிலர் கூறியது:

சினன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் 50 வரையில் விற்பனையாகும்போது ஓட்டல்களில் வழங்கப்படும் சாம்பார், புளிக் குழம்பு, வெங்காயச் சட்னி போன்றவற்றில் குறைந்த அளவிலேயே வெங்காய பயன்பாடு இருக்கும். விலை ரூ.50-ஐ கடக்கும்போது வெங்காய பயன்பாடு மிகக் குறைந்த அளவாக மாறிவிடும். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.14-க்கும் ரூ.20-க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

எனவே, உணவு வகைகளில் சின்ன வெங்காயம் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வாடிக்கையா ளர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து உணவகங்களில் சாப்பிடும் சூழலில் உள்ள மற்றும் வெங்காயம் விரும்பி உண்ணும் வழக்கம் கொண்டவர்களுக்கு இது ஒரு விழாக்காலம் என்றே கூறலாம். வெங்காயம் தாராளமாக பயன்படுத்தப்படும் உணவு வகைகளின் சுவை இயல்பாகவே கூடுதலாகி விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE