ரூ.2 கோடி பிணை கேட்ட இலங்கையை கண்டித்து ராமேசுவரத்தில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மீனவர்களுக்கு 2 கோடி பிணை கேட்ட இலங்கையை கண்டித்து ராமேசுவரத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் சார்பாக நேற்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்தது.

எல்லையைக் கடந்து மீின் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. மீனவர்களுக்கு மே 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில் மீனவர்களை பிணையில் விடுதலை செய்ய ஒவ்வொரு மீனவருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.2 கோடி பணம் செலுத்த வேண்டும் என்றும், பணம் செலுத்தி பிணை பெறும் மீனவர்கள் மீண்டும் மே 12 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசைக் கண்டித்து இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியூசி மீனவர் சங்கத்தினர் ராமேசுவரம் கடலில் இறங்கி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அச்சங்கத்தின் ராமேசுவரம் பொறுப்பாளர் மார்க்கஸ் தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். அப்போது இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை நிபந்தனை இன்றி விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்