தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் மற்றும்தென்காசி வழியாக திருநெல்வேலி - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்- 06005) வரும் 22 முதல் ஜூன் 24 -ம் தேதி வரைவெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்- 06006) வரும் 24-ம் தேதி முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 காப்பாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இதுபோல் தென்காசி வழியாக திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06004) வரும் 17-ம் தேதி முதல் ஜூன் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்புரயில் (எண் 06003) வரும் 18-ம் தேதிமுதல் ஜூன் 20 வரை செவ்வாய்க்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு திருநெல்வேலிக்கும் வந்து சேரும்
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 காப்பாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago