ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 3 புதிய டயாலசிஸ் மையங்கள்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை : சென்னையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 3 புதிய டயாலசிஸ் மையங்கள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறையை மேம்படுத்த 8 அறிவிப்புகளை மேயர் பிரியா ராஜன் வெளியிட்டார். இதில், > சென்னையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் 10 சதவீத பேரை மாநகராட்சி மருத்துவமனையை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

> 3 டயாலிசிஸ் மையங்கள் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்,

> மாநகர மருத்துவமனை கட்டிடங்களில் மேற்கூரை கசிவுகளை சரிசெய்தல் மற்றும் இதர கட்டுமானப் பணிகள் பராமரிப்பு மற்றும் மருத்துவமனை கட்டிடங்களின் பழுது பார்க்கும் பணிகளுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்,

> வீடற்றோருக்காக 3 புதிய காப்பகங்கள் கட்ட ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்,

> மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் தெரு நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் இரண்டு அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்,

> அனைத்து களபணியாளர்களுக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

> மன வளர்ச்சி குன்றி சாலையில் இருக்கும் நபர்களை தங்க வைக்க அனைத்துத் துறைகளுடன் இணைந்து ஒரு திட்டம் தயார் செய்யப்படும், உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்