சென்னை : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ. 770 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் 2022-2023-ஆம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613.35 கோடியாகவும், மூலதன வரவு ரூ.2,528.80 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி 770 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.800 கோடி, தொழில் வரி மூலம் ரூ.475 கோடி, முத்திரை தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ.170, மாநில நிதிக்குழு மானியம் மூலம் ரூ.500 கோடி, இதர வகையில் ரூ.879.77 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
» சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு
» சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பணியாளர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.1,836.84 கோடி, நிர்வாகச் செலவு ரூ.121.30, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவு ரூ.1.079.31 கோடி, கடனுக்கான வட்டி ரூ.148.40 கோடி உள்ளிட்டவைகள் முக்கிய செலவுகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago