ராமேசுவரம்: இலங்கையில் கரோனா பரவலுக்குப் பிறகு அந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை, தேயிலைத் தோட்டங்கள், ஆடைஉற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு அந்நியச் செலாவணி வரத்து பெரிதும் பாதிப்பு அடைந்தது.
இதன் காரணமாக விலைவாசி உயர்ந்து அத்தியாவசியப் பொருட்கள்கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இலங்கையில் வாழ வழியின்றி 3 தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் 2 படகுகளில் அகதிகளாக தனுஷ்கோடிக்கு கடந்த மாதம் 23-ம்தேதி வந்தனர். இந்நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தமீனவர் நிஷாந்த் (34), அவரது மனைவி ரஞ்சிதா (29), குழந்தைகள் ஜெனிஷ்ரிகா( 10), 2 வயது கைக்குழந்தை கிஷாந்தன் ஆகிய4 பேர் பைபர் படகில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை வந்து இறங்கினர்.
தகவலறிந்த மெரைன் போலீஸார் அவர்களை மண்டபம் மெரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது 2006-ம் ஆண்டு அகதியாக வந்து தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் நிஷாந்த்என்பதும், 2010-ம் ஆண்டு இலங்கைக்கு திரும்பிய அவர், அங்கு மன்னார் மாவட்டம் சிலாவத்துறை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீண்டும் அகதியாக தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்ததாகத் தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago