பெங்களூரு-தருமபுரி இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சேலத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ரயில் பாதை அமைந்துள்ளது. மின் மயமாக்கப்படாத இந்த ரயில் பாதையில் டீசல் மூலம் இயங்கும் ரயில் இன்ஜின்களைக் கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூர் வரையிலான ரயில் பாதையை மின் மயமாக்கும் பணி பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பெங்களூரு-தருமபுரி இடையிலான ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ரயில் சோதனை ஓட்டப் பணி கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே பெங்களூரு-ஓசூர் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்சேவை நேற்று முதல் பெங்களூரு-தருமபுரி இடையே நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித் துள்ளது.

தினமும் காலை 7.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்பட்டு பையப்பன அள்ளி, கார்மேலரம், ஆனேக்கல், ஓசூர், ராயக்கோட்டை, மாரண்ட அள்ளி, பாலக்கோடு ரயில் நிலையங்கள் வழியாக காலை 10.45 மணியளவில் தருமபுரி வந்தடையும் வகையில் மின்சார ரயில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த ரயில் மீண்டும் மாலை 4.20 மணிக்கு தருமபுரியில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடைகிறது. நேற்று தருமபுரி வந்தடைந்த இந்த மின்சார ரயிலுக்கு தருமபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சேலம் மண்டல தலைவர் வைத் திலிங்கம், மாவட்ட செயலாளர் கிரிதர், பொருளாளர் ரவிச்சந் திரன் உள்ளிட்டோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்