தாம்பரம் | காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநீர்மலையைச் சேர்ந்தவர் செண்பகம்(35). இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் திடீரென்று நேற்று காவல் நிலையத்திலேயே விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்ட சக பெண் காவலர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் திட்டியதால் செண்பகம் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்