100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய 3200 கிராமங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை : தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் கிராமங்களில் 3200 கிராமங்களில் வசிக்கும் தகுதியுடையோர் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 91 சதவீத பேர் முதல் தவணை தடுப்பூசியும், 76 சதவீத பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 15-வயதுக்கு மேற்பட்ட 6.12 கோடி பேரில் 5.63 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 76.22 லட்சம் பேர் 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 8.20 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் மொத்தம் 1.37 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். 49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளாமல் உள்ளோர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத்தவிர்த்து தமிழகத்தில் உள்ள 12,585 கிராமங்களில் 3,292 கிராமங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 121 நகராட்சிகளில் 27 நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்