விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு | கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களுக்கு ஜாமீன்; இன்று விடுவிப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 மாணவர்களும் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.

விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி மற்றும் பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் 9, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் கடந்த 29ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை சிபிசிஐடி போலீஸார் நீதிமன்ற அனுமதி பெற்று போலீஸ் காவலில் விசாரித்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார் நான்கு மாணவர்களையும் சிபிசிஐடி போலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் மாலை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி மதுரையில் உள்ள இளஞ்சிறார் நீதி குழுமத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி மருது பாண்டியன் நேற்றிரவு உத்தரவிட்டார். அதைத் தொட்ர்ந்து மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 மாணவர்களும் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்