20 மண்டலங்களாக மாறும் சென்னை மாநகராட்சி: மறு சீரைமைப்பு மண்டலங்கள் எவை?

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

2011-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களும் 155 வார்களும் இருந்தது. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் மாநகராட்சியில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன. மற்ற ஆறு சட்டசபை தொகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன. இந்த ஆறு தொகுதிகளை சென்னை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்களை அதிகரிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் நேரு, சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். இந்நிலையில், சென்னை மாநகராட்சி 20 மண்டலங்களாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: "முதற்கட்டமாக, சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மண்டலங்கள் சீராய்வு செய்யப்பட உள்ளன. மாநகராட்சியில் மணலி மண்டலத்தில் எட்டு வார்டுகள் மட்டுமே உள்ளது. அதேநேரம், தேனாம்பேட்டை மண்டலத்தில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து மண்டலங்களிலும் நிர்வாக வசதிக்கு ஏற்ப, வார்டுகளை மறுசீராய்வு செய்யப்படும்.

மணலி மண்டலத்தில் மணலி, மாதவம், பொன்னேரி உள்ளிட்ட 3 தொகுதிகள் உள்ளன. திரு.வி.நகர் மண்டலத்தில் திரு.வி.நகர், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர் உள்ளிட்ட மண்டலங்கள் உள்ளது. அண்ணா நகர் தொகுதியில் அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் உள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரம் விளக்கும், தி.நகர், சேப்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளது. கேடம்பாக்கத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. வளசரவாக்கம் தொகுதிகயில் மதுரவாயல், ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன.

இவ்வாறு ஒரு மண்டத்தில் பல சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மறு சீராய்வு தேவைப்படுகிறது. இந்த மறுசீராய்வில், ஐந்து மண்டலங்கள் கூடுதலாக அமைக்கப்படலாம். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 20 மண்டலங்களுடன் நிர்வாகம் செயல்படும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்