தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களை பாதிக்காத வகையில் வரி சீரமைப்பு மேற்கொள்ளப்படும் என மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சொத்து வரி விகிதங்களை மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
``உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கும் நிதி ஆதாரத்தை வைத்து தற்போதுள்ள நிலையில் எதையும் செய்ய முடியாது என்பதால் இந்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது'' என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் கூறும்போது, ``மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
எனவே, இது தொடர்பாக விரைவில் மேயர், துணை மேயர், அதிகாரிகள் ஆலோசனையுடன் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மக்களை பாதிக்காத வகையில் வரிவிதிப்பு செய்யப்படும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago