கல்பாக்கம்: கூவத்தூரை அடுத்த சீக்கனாங்குப்பத்தில் ஈசிஆர் சாலையில் வந்து கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்ததால், சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூரை அடுத்த சீக்கனாங்குப்பம் கிராமத்தில் ஈசிஆர் சாலையையொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈசிஆர் சாலையில் சென்னையை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக ஒதுங்கியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்து நின்றது.
அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சம்பவத்தையடுத்து, லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.
தகவல் அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி இருப்பதை அடையாளப்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்வதைத் தடுக்கவும், அப்பகுதியில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஈசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கூவத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக அப்பகுதியில் தடுப்புகளை அமைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago