கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்டுறவுச் சங்கங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விருதுநகர் மண்டலம் ராஜபாளையம் வட்டம் முகவூர் கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணியாற்றிய கே.தங்கதுரை மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும்பணியாளர்களை மிரட்டி பணம்வசூலித்தது ஆகிய புகார்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர், மார்ச் 30-ம் தேதி நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் அரிசி கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கூட்டுறவு சங்க பதிவாளரின் தனி வாட்ஸ்அப்புகார் எண்ணான 98840 00845-ல் புகார் அளிக்கலாம்.

எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களும், எந்தவிதமானநிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அச்சமின்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்