திராவிட மாடல் இந்தியாவுக்கே வழிகாட்டும்: விழுப்புரம் அருகே சமத்துவபுரத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் கருத்து

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: இந்திய திருநாடே சமத்துவ நாடாக வும் சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். அதற்குத் தமிழகமும், நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொழுவாரி கிராமத்தில் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அங்கு நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஒழுந்தியாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற அரசு விழா வில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.24 கோடி மதிப்பிலான 38 திட்டப் பணிகளை திறந்து வைத்தும் 10,722 பயனாளிகளுக்கு ரூ.42.69 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:

238 சமத்துவபுரங்கள்

‘எந்தவிதப் பாகுபாடும் இன்றி இந்தச் சமூகம் வாழ வேண்டும்’ என்று பெரியார் கனவு கண்டார். அதன் அடையாளமாகத்தான் 1997-ம் ஆண்டில் சமத்துவபுரம் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 238 சமத்துவபுரங்களை அவர் அமைத்துக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் கொழுவாரியில் அமைக்கப்பட்ட இந்த சமத்துவபுரம்.

2010-11-ம் ஆண்டிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டம் இது. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. சமத்துவ புரங்களில் 90 விழுக்காடு குடும்பங்கள் தொடர்ந்து அதே வீடுகளில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். 1997 முதல் 2010 வரை கட்டப்பட்ட சமத்துவபுரங்களை 190 கோடி ரூபாயில் சீரமைக்க சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, இந்த அரசு உத்தர விட்டுள்ளது.

சமத்துவபுரத்தைப் போல 2011-ம் ஆண்டுக்குப் பிறகு கைவிடப்பட்ட மற்றொரு திட்டம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். மேலும் ஒரு திட்டம் ‘நமக்கு நாமே’ திட்டம். இந்தத் திட்டத்தையும் கடந்த 10 ஆண்டுகளாக முடக்கி போட்டு வைத்திருந்தார்கள்.

இந்தத் திட்டங்கள் இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. 10 ஆண்டுகளாக செய்யாத திட்டங்களை, பத்தே மாதத்தில் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு ஆட்சி தான் இந்த ஆட்சி. இந்தத் தமி ழகமே, ஏன் இந்த இந்திய திருநாடே சமத்துவ நாடாகவும் சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். இதற்குத் தமிழ்நாடும் நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

கொழுவாரியில் சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த விளையாட்டுத் திடலில் அப்பகுதி இளைஞர்களோடு கைப் பந்து விளையாடினார்.

ரூ.500 கோடியில் ஆலை

இந்நிகழ்வைத் தொடர்ந்து திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக் கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:

‘கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், சமூகத் திறனில் நாம் யாருக்கும், எந்த மாநிலத்தவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல’ என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில், தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை தீட்டி, செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தினுடைய காலணிகள் தயாரிப்புத் திட்டத்துக்காக 2006-ம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 2009-ம் ஆண்டில், செய்யாறு சிப்காட் பகுதியில் அடிக்கல் நாட்டி அன்றைக்கு தொடங்கி வைத்தேன். அதன் தொடர்ச்சியாக ரூ.300 கோடி முதலீட்டுடன் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொடங் கப்பட்ட இந்த நிறுவனம், இன்றைய தினம் கிட்டத்தட்ட ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்தது மட்டுமில்லாமல், 35 ஆயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பையும் கொடுத்து வருகிறது. குறிப்பாக, 70 சதவீதத் துக்கு மேல் பெண்கள் பணியமர்த் தப்பட்டிருக்கிறார்கள். மேலும், ரூ.1,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யவும் இந்த நிறுவனம் திட் டமிட்டிருக்கிறது. இதை வரவேற் கிறேன்.

அரசு பொறுப்பேற்ற இந்த 10 மாத காலத்தில் தமிழ்நாட்டை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. இதுதான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம். தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். காலணி உற்பத்தியில், தேசிய மற்றும் உலக அளவில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பங் களிப்பு, தேசிய காலணி உற்பத்தியில் 26 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 45 சதவீதமாகவும் இருக் கிறது.

1 டிரில்லியன் டாலர்

அகில இந்திய அளவில், சட் டம் ஒழுங்கைப் பராமரிப்பதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட தமிழ்நாடு, பொரு ளாதார ரீதியாக இந்தியாவின் மிகவும் சுதந்திரமான மாநிலமாக தர வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. 2030-ம் ஆண்டில் நம்முடைய மாநிலம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சு மணன், மணிக்கண்ணன், சிவ குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செய லாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன்.பி.நாயர், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்