விஜயகாந்த் தொகுதித் தேர்வு பின்னணியில் சிவ புராணம்?

By என்.முருகவேல்

ஒவ்வொரு முறையும் தேர்தல் களம் காணும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பழைய தென்னாற்காடு மாவட்டமான கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலேயே தொகுதியை தேர்வு செய்வது குறித்து அவர் சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை கூறினர்.

கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிக-வை துவக்கிய விஜயகாந்த், முதன்முதலில் வன்னிய சமூகத்தினர் அதிகம் வசிக்கும் விருத்தாசலத்தில் போட்டியிட்டு 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.விருத்தாசலம் தங்களதுகோட்டை என நினைத்த பாமகவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்து 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது 3-ம் முறையாக களம்காணும் விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதிக்கு அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடும்போதெல்லாம் கடலூர், விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலேயே தொகுதியை தேர்வு செய்துவருகிறார். அதற்கு முக்கியக் காரணம் அவரது ரசிகர்கள் அதிமுள்ள பகுதியாக தென்னாற்காடு விளங்குவது ஒருபுறம் என்றாலும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட விஜயகாந்த், பழமையான சிவன் கோயில்களில் ரி என்ற எழுத்தில் முடியும் சிவனை மூவராகக் கொண்ட கோயில்கள் அமைந்துள்ள தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிடுகிறாராம்.

அதன்படி முதல்முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் பழமையான விருத்தகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் மூலவர் விருத்தகிரி. இந்த ஆலயத்தில் இருந்த அர்த்தநாரிஸ்வரர் சிலை கடத்தப்பட்டு, பின்னர் ஜெர்மனியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மீட்கப்பட்டு விருத்தகிரிஸ்வர் கோரியில் மீண்டும் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டார். இதற்கு காரணம், ரிஷிவந்தியத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் அர்த்தநாரி. தற்போது உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனசூர்கோட்டையில் கிராம அர்த்தநாரி எனும் பழமையான சிவன் ஆலயம் உள்ளதாகவும், அதனால் இந்தத் தொகுதியை தேர்வு செய்திருப்பதாகவும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்