கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்நேற்று நடந்தது. இதில் பங்கேற்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சின்ன வெங்காயத்துடன் வந்தனர். வெங்காய விலை வீழ்ச்சியை எதிரொலிக்கும் வகையில், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தனர். மேலும், ஒரு கிலோ வாங்கினால், ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாகவும் வழங்கினர்.
ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி செய்தி யாளர்களிடம் கூறும் போது, ‘‘கோவையில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
ஓர் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த 2 மாதங்களாக போதுமான விலை இல்லாததால் விவசாயிகளிடம் கிலோ ரூ.6-க்கு சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.50-க்கு அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago