ஈரோடு: மொடக்குறிச்சியை அடுத்த கிளாம்பாடி பேரூராட்சி திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார், பாஜகவில் இணைந்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கிளாம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 11 வார்டுகளிலும், அதிமுக, பாஜக தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் இரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.சுரேஷ்குமார், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக ஒன்றிய தலைவர் சேகர், எஸ்.டி.செந்தில்குமார், கவுன்சிலர் ஜெகதாம்பாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாஜகவில் இணைந்த டி.சுரேஷ்குமார் கூறும்போது, ‘நாட்டு நலனுக்கான கட்சியாக பாஜக விளங்குவதால், அக்கட்சியில் இணைகிறேன்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago