சென்னை: கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , "தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும்பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், அரவிந்த் பி. டட்டார் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில்,
1) கி . வைத்தீஸ்வரன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம், 2) ஜி. நடராஜன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம், 3) சுரேஷ் ராமன், துணைத் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர், டிசிஎஸ் - சேவைப் பிரிவு. 4) ஸ்ரீவத்ஸ் ராம், மேலாண்மை இயக்குநர், வீல்ஸ் இந்தியா லிட்., 5)கே.வேல்முருகன், தலைவர், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பு. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago