சேலம்: கோடை தொடங்கிய நிலையில், ஏற்காடு, மேட்டூருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித் துள்ளது.
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேர அதிகபட்ச வெப்பம் நேற்று 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. வெயிலின் தாக்கம் காரணமாக வீடுகளில் மக்கள் முடங்கியிருப்பதை தவிர்த்து, குளிர் பிரதேசங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் வழக்கத்துக்கு மாறாக நேற்று பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. அங்குள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ஏரிப் பூங்கா, ரோஜாத் தோட்டம், பகோடா பாயின்ட் காட்சி முனைப்பகுதிகள் என சுற்றுலா இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடையில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்தோம். தற்போது, கரோனா தொற்று அச்சம் குறைந்துவிட்டதால் ஆர்வமுடன் சுற்றுலாவுக்கு வந்துள்ளோம். ஏற்காட்டில் குளுமையான சூழல் நிலவுவது இதமாக உள்ளது” என்றனர்.
இதனிடையே, மேட்டூர் அணைப் பூங்காவிலும் நேற்று மக்கள் வருகை அதிகமாக இருந்தது. அணைப் பூங்காவுக்கு நேற்று 6,400-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதனால், பூங்கா முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பார்வையாளர் கட்டணமாக ரூ.32,365 வசூலானது.
இதேபோல சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் அண்ணா பூங்கா, ஆத்தூர் அடுத்த ஆனைவாரி சூழல் சுற்றுலா மையம் என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா இடங்களிலும் நேற்று பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago