கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை முதல் தலை வாசல் வரை 4 வழிச்சாலை பணிகள் நிறைவடையாமல் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு வாகன உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர்.
சேலம்-உளுந்தூர்பேட்டை சாலை மார்க்கத்தில் சேலம் சீலநாயக்கன்பட்டி முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வரை 136 கி.மீ தூரம், கடந்த 2008-ம் ஆண்டு ரூ.941 கோடிதிட்ட மதிப்பீட்டில் 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டது.
ஆனால் புறவழிச் சாலைப் பணிநிறைவடையாமலேயே 2013ம் ஆண்டு முதல் இந்த 4 வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்தது. இந்தச் சாலை யில்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மாடூர், சேலம் மாவட்டம் தலைவாசல் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக் கப்பட்டு சுங்கக் கட்டண மும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சாலை மார்க்கத்தில் மக்கள் தொகை மிகுந்த சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, உடையார்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவ னாசூர்கோட்டை, உளுந்தூர் பேட்டை ஆகிய ஊர்களில் உள்ளபுறவழிச் சாலைகள் நிறைவ டையாமல் இருவழிச் சாலைகளாக தொடர்வதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதன்விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் இதுவரை 850 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இச்சாலையை 4 வழி சாலையாக பணிகளை நிறைவு செய்து, விபத்துக்களை குறைக்கவேண்டும் என கள்ளக்குறிச்சி எம்பி கவுத மசிகாமணி மக்களவையில் வலி யுறுத்தியுள்ளார்.
இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையிலான புறவழிச்சாலைகள் அனைத்தும் நான்குவழிச்சாலை ஆக மாற்ற டிஜிபிஎஸ்எனும் நவீன கருவி கொண்டு சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக அளவீடு செய்யப் பட்டது. ஆனால் அளவீட்டோடு அப்பணி முடிந்தது. மாறாக 39 கி.மீபுறவழிச்சாலையில் விபத்தை குறைக்கும் வகையில், ரூ.2.21லட்சம் செலவில் இருவழிச்சாலை யின் மத்தியில் 18 மீட்டருக்கு ஒரு போலாட் வீதம் 170 போலாட்கள் அமைக்கப்பட்டதே தவிர, நான்கு வழிச்சாலை மாற்றும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறு கின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்ட வாகன உரிமையாளர்கள். மேலும்
நிறைவுபெறாத சாலையில் சுங்கச்சாவடி அமைத்து, 4 வழிப் பாதைக்கான சுங்கக் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். தரைவழிப்போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவிப்பின் படி 60 கி.மீ-க்கு ஒரு சுங்கச்சாவடி தான் அமைக்கவேண்டும் என்பதால்,உளுந்தூர்பேட்டை முதல் தலைவாசல் வரை உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றவேண்டும் எனவும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உளுந்தூர் பேட்டையில் உள்ள சுங்கச்சாவடி நிர்வாக மேலாளர் சங்கரிடம் கேட்டபோது, "சுங்கக் கட்டணங்கள் வசூலிப்பில் எந்த முறைகேடும் இல்லை. 136 கி.மீ 4 வழிப் பாதை யில் 39 கி.மீ இருவழிப் பாதை. அதற்கேற்றவாறு தான் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, ஒப்பந்தப்படியே வசூலிக்கப்படுகிறது.சாலைஅமைப்பது நெடுஞ்சாலைத்துறை யின் பணி. அதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago