சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது நவீன இயந்திரங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்ச வேண்டாம்: கோயில் துணை ஆணையர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து தல்லாகுளம் பூதக்குடி மண்டபத்தில் அழகர் கோயில் துணை ஆணையர் தி.அனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி திருமஞ்சனத்தோடு நிறைவு பெறு கிறது.

கரோனா தொற்று ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா, கோயில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடந் தது. தற்போது ஊரடங்கு தளர்த் தப்பட்டுள்ளதால் பக்தர்கள் பங் கேற்புடன் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

கள்ளழகர் புறப்பாட்டின்போது 456 மண்டகப்படிகளில் எழுந்தருள் வார். எதிர்சேவையின்போது ஜிபிஎஸ் முறையில் புதிய லிங்க் ஒன்று தொடங்கப்பட்டு கள்ளழகர் எந்த மண்டகப்படியில் உள்ளார் என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ளலாம். அதேபோல், ‘மதுரை காவலன்’ என்ற செயலி மூலம், கோயில் இணையதளம் மற்றும் தனி லிங்க் மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கள்ளழகர் புறப்பாடு, எதிர் சேவையின்போது நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் சுவாமிக்கு பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். நவீன இயந்திரங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தால் அதிக அழுத் தத்துடன் தெளிக்கப்படும் தண்ணீர் காரணமாக சுவாமி சிலை சேதமடைகிறது. எனவே, தண்ணீரை பீய்ச்சி அடிக்க நவீன இயந்திரங்கள் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்து காவல்துறை மூலம் பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE