கோவையில் நாளை நடைபெறுகிறது ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் பங்கேற்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி நாளை (ஞாயிறு) காலை 9 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

அத் தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையிலுள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன், ஐஏஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன், ஐபிஎஸ்., ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ.புவியரசன்,சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை யாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் http://www.htamil.org/00397 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும். இந் நிகழ்வின்பார்ட்னராக இந்துஸ்தான் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட்டும், மீடியா பார்ட்னராக கோவைகிங் டெலிவிஷனும் இணைந்துள்ளன. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும், பாடத்திட்டக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்