அரியலூர்: நீட் தேர்வினை எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள, அரியலூரிலிருந்து சென்னைக்கு நடைபயணம் புறப்பட்ட இளைஞர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தில், நீட் தேர்வுக்கு எதிராக இன்று காலை (ஏப்ரல் 1) இந்த ஊர்வலம் தொடங்கியது. நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நூலகம் குழுமூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் பரபப்புரை ஊர்வலம் புறப்பட தயாரானது.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, அனிதா நினைவு நூலகத்தில் இருந்து 8 நாட்கள் பரப்புரை நடைபயணத்தை அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர். சென்னை வரை நடைபயணமாக செல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இளைஞர்கள் ஏந்தியிருந்த பதாகையில், ''நீட் தேர்வினை எதிர்த்து மாணவர்களின் பரப்புரை நடைபயணம்", "அனிதாவின் நினைவில்லம் தொடங்கி சென்னை வரை", "நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு மாணவர்கள்'' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதனுடன் நீட் தேர்வு தொடர்பாக உயரிழந்தவர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
அப்போது, பேரணி புறப்பட தயாரான இளைஞர்களை செந்துறை போலீஸார், தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், காவல்துறையைக் கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago