நாகர்கோவில் மருத்துவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: நாகர்கோவில் மருத்துவர் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவில் பறக்கை இலந்தைவிளையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.பாஸ்துரை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகன் சிவராமபெருமாள் (43), முதுநிலை மருத்துவராக பணிபுரிந்தார். திமுக மருத்துவரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். என் மருமகள் அரசு மருத்துவராக உள்ளார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். என் மகன் மீது இலந்தைவிளையைச் சேர்ந்த விஜய் ஆனந்த் 2016 முதல் பல்வேறு புகார்களை அளித்து வந்தார். இப்புகார்களின் பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், விஜய்ஆனந்த் ஆகியோர் என் மகனை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர்.

கடந்த 12.7.2020-ல் என் மகன், மனைவி மற்றும் 2 மகள்களுடன் பறக்கையில் இருந்து இலந்தைவிளைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீஸார் காரை நிறுத்தி மருமகள், பேத்திகள் முன்னிலையில் என் மகனை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த என் மகன் 26.10.2020-ல் தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவர் சிவராமபெருமாள்

தற்கொலைக்கு முன்பு என் மகன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.அந்த கடிதத்தின் பேரில் டிஎஸ்பி பாஸ்கரன், விஜய்ஆனந்த் மீது சுசீந்திரம் போலீஸில் என் மருமகள் புகார் அளித்தார். ஆனால் போலீஸார் யாருடைய பெயரையும் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்தனர். என் மகன் எழுதிய கடிதத்தை தருமாறு போலீஸார் வீட்டிற்கே வந்து மிரட்டினர்.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தோம். பின்னர் என் மகன் தற்கொலை வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீஸார் டிஎஸ்பி பாஸ்கரன், விஜய்ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் மகன் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரரின் மகன் தற்கொலை வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்