தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாகப் பேசிய திமுகவினரை பொதுமக்கள் கண்டிக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜகதலைமை அலுவலகத்தில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலங்கானா, புதுச்சேரி ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக முன்னாள் தலைவர். இந்தியாவிலேயே ஒருபெண்ணுக்கு பெரிய மரியாதை கொடுத்து, 2 மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது தமிழக விழாக்களிலும் அவர் பங்கெடுத்து வருகிறார். அவரை தரக்குறைவாகப் பேசியது கண்டிக்கத்தக்கது. பாஜக வளர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுகவினர் சிலர் அவரை தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதை தமிழக மக்கள் கண்டிக்க வேண்டும். இதுபோன்ற அரசியலை அனுமதிக்கக் கூடாது. ஒரு பெண்ணை, ஆளுநரைதரக்குறைவாகப் பேசியதைப் பார்த்து நான் கூனிக்குறுகி நின்றேன். திமுகவினர் பொய் பேசுவதில் வல்லவர்களாக மாறிவிட்டனர். தமிழக அரசியலில் பாஜகவை கருத்தியல் ரீதியாக திமுகவால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார்கள்.

கர்நாடகாவில் நான் பணியாற்றியபோது, அங்கு சித்தராமையா ஆட்சியைக் கவிழ்க்க காரணமாக இருந்தேன் என்பதுபோல திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார்.

துபாய் பயணம் குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டேதான் இருப்போம். எனது பதவிபறிபோவதாக டெல்லியில் இருந்துதகவல் கிடைத்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். திமுகவில் நிரந்தரத் தலைமையை வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை சிதைக்கிறார்கள். பாஜகவில் சாதாரணமானவர்கள்கூட தலைவராக வரலாம், பிரதமராகலாம்.

என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து, என்னைக் கைது செய்யவருவார்கள் என்று கமலாலயத்தில் 7 மணி நேரம் காத்திருந்தேன். ஆனால் காவல் துறையினர் வரவில்லை. எனது ஊரில் உள்ள விவசாய நிலத்தில் வேலி போடவில்லை. எனது இடம் அரசு நிலத்தில் உள்ளதா என்றுகூட அளந்துபார்த்துள்ளனர். நான் பணியாற்றிய இடங்களுக்குச் சென்று, நான்சந்தித்த வழக்குகள், சந்தித்த நபர்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். என் மீது கடுகளவுகூட குற்றம் கண்டுபிடிக்க முடியாது.

நாங்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரைப் பற்றியும் பேசவில்லை. அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் தற்போதைய அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு வேறு மாதிரியான அரசு. உரசிப் பாருங்கள். ஒரு பேச்சு பேசினால், அதற்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்