நாகர்கோவில்: வீட்டைவிட்டு வெளியேறி கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டுச் சிறுவன் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
கன்னியாகுமரியில் 13 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுச் சிறுவன் ஒருவன் கடந்த 4 நாட்களாக சுற்றித்திரிந்தான். அவனுடன் பெற்றோர் இல்லாததைப் பார்த்த அப்பகுதி வியாபாரிகள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். கன்னியாகுமரி போலீஸார் அந்த சிறுவனிடம் விசாரித்தபோது தனது பெயர் மீலமாதவா(13) என்று கூறினான்.
ரஷ்ய மொழியும், இந்தியும் கலந்தவாறு அந்தச் சிறுவன் பேசியது போலீஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடந்தது. ரஷ்யாவின் அண்டை நாடான எஸ்தோனியாவைச் சேர்ந்த வாசுதேவ ஜார்வின், அலெக்ஸாண்ட்ரா தம்பதியரின் மகன்தான் இந்தச் சிறுவன் என்பதும், கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்துடன் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இவர்கள் வசித்து வருவதும் தெரியவந்தது.
அத்துடன், சிறுவன் மீலமாதவா காணாமல் போனது குறித்து, மதுராவில் உள்ள கோவர்தன் காவல்நிலையத்தில், அவரது பெற்றோர் புகார் அளித்திருப்பதையும், குமரி போலீஸார் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக, மதுராவில் உள்ள சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் வந்தனர். கோட்டாறு காவல்நிலையத்தில் வைத்து, சிறுவன் மீலமாதவாவை அவனது பெற்றோரிடம், எஸ்பி ஹரிகிரண் பிரசாத் ஒப்படைத்தார்.
சிறுவனின் தந்தை வாசுதேவ ஜார்வின் கூறும்போது, “சிறுவன் மீலமாதவா அடிக்கடி தனியாக சுற்றுலா செல்வது வழக்கம். தற்போதும் ஏதாவது ஊருக்கு சென்றிருக்கலாம் என எண்ணி இருந்தோம். திடீரென அவனிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லாததால், போலீஸில் புகார் அளித்தோம். எங்கள் மகனை மீட்டு ஒப்படைத்த போலீஸாருக்கு நன்றி” என்றார்.
சிறுவனை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் காவலர் கலைச்செல்வியைப் பாராட்டி எஸ்பி சான்றிதழ் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago