ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோளின் வெற்றி: திசையறிதல் தொழில்நுட்பத்தில் இந்தியா தனித்து இயங்கும் வாய்ப்பு - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

By எம்.மணிகண்டன்

ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற் கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் திசையறிதல் (நேவிகேஷன்) துறையில் இந்தியா தனித்து இயங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை கூறினார்.

நேவிகேஷன் எனப்படும் திசையறிதல் பயன்பாட்டுக்காக ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional navigational satellite system) எனப் படும் 7 செயற்கைக்கோள் களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. ஐஆர்என்எ ஸ்எஸ் 1ஏ 2013, ஜூலை 1 அன்றும், ஐஆர்என்எஸ்எஸ் 1பி 2014 ஏப்ரல்-4 அன்றும், ஐஆர்என்எஸ்எஸ் 1சி 2014, அக்டோபர் 16-ம் தேதியும், ஐஆர்என்எஸ்எஸ் 1டி 2015, மார்ச் 28-ம் தேதியும், ஐஆர்என்எஸ்எஸ் 1இ கடந்த ஜனவரி 20-ம் தேதியும், ஐஆர்என்எஸ்எஸ் 1எஃப் கடந்த மார்ச் 10-ம் தேதியும் விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், ஐஆர்என் எஸ்எஸ் வரிசையின் கடைசி செயற்கைக்கோளான ஐஆர்என் எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோள் (1,425 கிலோ) பிஎஸ்எல்வி-சி33 ராக்கெட் மூலம் ஹரி கோட்டாவிலிருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது. இடங்காணல் தொழில் நுட்பத்துக்கு உதவக்கூடிய ஐஆர்என்எஸ்எஸ் வரிசை செயற்கைக்கோள்களிலேயே, ஐஆர்என்எஸ்எஸ் 1-ஜி இடங் காணல் மற்றும் திசையறிதல் சேவைகளை மேம்பட்ட அள வில் வழங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

ஜிபிஎஸ் எனப்படும் இடங் காணல் சேவைக்கு இந்தியா இது வரை அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைத்தான் பயன் படுத்தி வந்தது. இந்த சூழலில், ஐஆர்என்எஸ்எஸ் வரிசை யில் 7 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டது. இந்த செயற்கைக்கோள்களின் பயன்பாடு 2 வகைப்படும் ஒன்று நிலையான சேவை (Standard service) மற்றொன்று வரையறைபடுத்தப்பட்ட சேவை (Restricted service). இதில் நிலையான சேவையின் மூலம் பொதுமக்கள் அனை வரும் இடங்காணல் மற்றும் திசையறிதல் சேவைகளை பயன்படுத்தலாம். ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக அந்த துறையினர் பயன்படுத்தும் சேவையும் உள்ளது.

ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் கடைசி செயற்கைக்கோளான 1ஜி-யை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம், இந்தியா தனது இடங்காணல் மற்றும் திசையறிதல் தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்வதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்படும். இடங்காணல் சேவைக் காக வரும் காலத்தில் அமெரிக்காவின் உதவியை நாட வேண்டியிருக்காது.

ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற் கைக்கோளின் சேவைகளை இந்தியாவை சுற்றி 1,500 சதுர கி.மீ. தொலைவுக்கு பயன்படுத்த முடியும். இதனால் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நாடுகளும் பயனடையும். இந்த செயற்கைக்கோள் முழு பயன்பாட்டுக்கு வர இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும்.

ரஷ்யாவின் GLONASS, சீனா வின் BeiDou, ஐரோப்பாவில் GALILEO என சில இடங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை, ஐஆர்என்எஸ்எஸ்-1ஜியின் வெற்றியின் மூலம் நமக்கும் சொந்தமாகியுள்ளது.

நீர், நிலம், ஆகாயம் என 3 தளங்களிலும் திசையறிதல் பணியை ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் செய்யும். இடத்தோடு நேரத்தையும் துல்லியமாக அறிவிக்கக் கூடிய வசதி ஐஆர்என்எஸ்எஸ்-1ஜியில் உள்ளது. இந்த செயற்கைக்கோள் ராணுவம் மற்றும் பாதுகாப் புத் துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும். ராணுவத் துறைக்கான சேவை களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாத வண்ணம் குறியாக்க (encryption) முறைப்படி அணுகும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்