சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேசுகிறார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
டெல்லியில் நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும். மேகேதாட்டு அணைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்து வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய அமைச்சர் அமித்ஷா வையும் முதல்வர் சந்தித்து பேசுகிறார்.
ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறார். ஏப்ரல் 2-ம் தேதி திமுக அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago