கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் (பி.ஹெச்டி) கற்பிக்கப்படுகின்றன. இளநிலைப் பிரிவில் பி.எஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 11 பட்டப்படிப்புகள் உள்ளன.
நடப்பு 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் வேளாண்மை பாடத்தை படித்த மாணவ, மாணவிகள் இளநிலை வேளாண்மை பாடப்பிரிவில் சேர 5 சதவீதம் (98 இடங்கள்) சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 14 உறுப்புக் கல்லூரிகளில் மட்டுமே இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவந்தது.
இணைப்புக் கல்லூரிகளில் இந்த இடஒதுக்கீடு இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, ஈரோடு மாவட்டம் சுண்டப்போடு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சந்திரன்(21) பாதிக்கப்பட்டது குறித்து 20-8-2019 அன்றும், அந்த மாணவர் மாடுமேய்ப்பது குறித்து 5-7-2021 அன்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது.
இவ்விவகாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்குச் சென்றதையடுத்து, இணைப்புக் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான 5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, வேளாண் பல்கலைக்கழகத்தின் முதன்மையர் (வேளாண்மை) கல்யாணசுந்தரம் கூறும்போது, ‘‘இப்பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் இருப்பதுபோல, 28 இணைப்புக் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி மாணவர்களுக்காக, வேளாண்மைப் பிரிவில் சேர 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழில் வகுப்புகள்
இதனால் 120 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பிரிவில் வேளாண்மை பாடத்தை படித்த மாணவ, மாணவிகள் பயனடைவர். மேலும், பல்கலைக்கழகத்தில் ஆங்கில வழிக்கல்வியில் வகுப்புகள் எடுப்பது போல, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆகிய 2 பாடப்பிரிவுகளுக்கு தமிழில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. தமிழக அரசின் உத்தரவின் பேரில், இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பழங்குடியின மாணவர் சந்திரனுக்கு வேளாண் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் சுயநிதிப் பிரிவில் பி.எஸ்சி வேளாண்மை பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பல்கலைக்கழக முதன்மையர் எம்.கல்யாணசுந்தரம், மாணவர் சந்திரனிடம் நேற்று வழங்கினார். மாணவருக்கு உதவிய ‘சுடர்’ அமைப்பின் நட்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago