சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் பதவி: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியின் மண்டலக் குழுத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்கள் மற்றும் நியமனக் குழு உறுப்பினர்கள் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி திமுக தலைவராக ந.ராமலிங்கம், துணைத் தலைவர்களாக ஏஆர்பிஎம்.காமராஜ், டிஎஸ்பி.ராஜகோபால், கொறடாவாக ஏ.நாகராஜன், பொருளாளராக வேளச்சேரி பி.மணிமாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மண்டலக் குழுத் தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுவோர் விவரம்:

மண்டலக் குழுத் தலைவர்கள்: மண்டலம்-1 (திருவொற்றியூர்) - தி.மு.தனியரசு, மண்டலம்-2 (மணலி) - ஏ.வி.ஆறுமுகம், மண்டலம்-3 (மாதவரம்) - எஸ்.நந்தகோபால், மண்டலம்-4 (தண்டையார்பேட்டை) - நேதாஜி யு.கணேசன், மண்டலம்-5 (ராயபுரம்) - பி.ஸ்ரீராமுலு, மண்டலம்-6 (திரு.வி.க.நகர்) - சரிதா மகேஷ்குமார், மண்டலம்-7 (அம்பத்தூர்) - பி.கே.மூர்த்தி, மண்டலம்-8 (அண்ணா நகர்) - கூபி ஜெயின், மண்டலம்- 9 (தேனாம்பேட்டை) - எஸ்.மதன்மோகன், மண்டலம்-10 (கோடம்பாக்கம்) - எம்.கிருஷ்ணமூர்த்தி, மண்டலம்-11 (வளசரவாக்கம்) - நொளம்பூர் வே.ராஜன், மண்டலம்-12 (ஆலந்தூர்) - என்.சந்திரன், மண்டலம்-13 (அடையார்) - ஆர்.துரைராஜ், மண்டலம்-14 (பெருங்குடி) - பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன், மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்) - வி.இ.மதியழகன்.

நிலைக் குழு தலைவர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள்: கணக்கு குழுத் தலைவர் - க. தனசேகரன், பொது சுகாதாரக்குழுத் தலைவர் - சாந்தகுமாரி, கல்விக் குழுத் தலைவர் - பாலவாக்கம் த. விசுவநாதன், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர்- சர்பஜெயாதாஸ் நரேந்திரன், நகரமைப்புக் குழுத் தலைவர் - தா.இளையஅருணா, பணிகள் குழுத் தலைவர் - நே.சிற்றரசு, நியமனக் குழு உறுப்பினர்கள் - ராஜா அன்பழகன், சொ.வேலு.

இவ்வாறு அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்