உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே உள்ள ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கழிப்பறையைச் சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அவர் கழிப்பறையைச் சுத்தம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டாரா? என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள கழிப்பறையை அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையுடன் சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் இந்த மாணவியை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்யவிட்டதாகச் சிலர் புகார் கூறியுள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து மாவட்டக்கல்வி அலுவலர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அந்தப் பகுதி ஊராட்சி மன்ற உறுப்பினர் தாந்தோனி உள்ளிட்ட சிலர் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்துப் பேசியுள்ளனர். அப்போது, 'பள்ளியில் யாரும் கழிப்பறையைச் சுத்தம் செய்யும்படி அந்த மாணவியை வலியுறுத்தவில்லை' என்று கூறி அப்போதைக்கு இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கல்வித் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago