திருவண்ணாமலை: சாதி மோதலை தூண்டும் வகை யில் செயல்பட்டதாகக் கூறி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஜமீன் கூடலூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த ம.சுகுமாரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஜமீன் கூடலூர் ஊராட்சி செயலாளராகவும், நீலந் தாங்கல் ஊராட்சியில் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவர் ம.சுகுமார். இவர், ஊராட்சி செயலாளர் பணியை சரிவர செய்ய வில்லை. நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்கு எதிராகவும், ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இதனால் நிர்வாக நலன் கருதி, திருவண்ணாமலை ஒன்றியம் இசுக்கழிகாட்டேரி ஊராட்சி செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு பெரியகல்லப்பாடி ஊராட்சிக்கு பணியிட மாறுதல் அளித்து உத்தரவிடப்பட்டது. மேலும், ஜமீன் கூடலூர் மற்றும் நீலங்தாங்கல் ஊராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி விடுவிக்கப்பட்டார். ஆனால், புதிய பணியிடத்தில் பணியில் சேரவில்லை.
பணியிட மாறுதல் உத்தரவை ம.சுகுமார் உதாசினப்படுத்தி யுள்ளார். மேலும், நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டுக்கு கடந்த ஜனவரி 10-ம் தேதி அத்துமீறி சென்று, அவரை சாதி ரீதியாக இழிவுப்படுத்தி தாக்கியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளராக அரசுப் பணயில் இருந்து கொண்டு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு, ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியுள்ளார்.
மேலும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, சாதி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். ஊராட்சி நிர்வாகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலையாமல் இருக்கவும், ஊராட்சி யில் சமுதாய நல்லிணக்கத்தை பராமரிக்க ஊராட்சி செயலாளர் ம.சுகுமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷின் பணி யிடை நீக்க உத்தவை, ஊராட்சி செயலாளர் ம.சுகுமாரிடம் கீழ் பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக நேற்று முன்தினம் வழங் கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
இதற்கிடையில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக உள்ள சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.17.55 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ள பணியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒன்றியக் குழு கவுன்சிலராக உள்ள தனது மனைவி அனுராதா புகார் கொடுத்ததால், தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவண்ணா மலை அடுத்த வேங்கிக்காலில் சங்கம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சுகுமாரின் பணியிடை நீக்கத்தை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது” என முடிவு செய்யப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago