கோவை: கோரிக்கையை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை, தயிர், மோரை தரையில் கொட்டி விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள்குறைதீர் முகாம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நேற்றுநடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். கேனில் கொண்டு வந்த பால், தயிர், மோர்ஆகியவற்றை ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஆட்சியரை சந்தித்துஅளித்த மனுவில், ‘‘கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்ற னர். மாட்டுத் தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். ஊக்கத் தொகை வழங்க வேண் டும். பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தித் தர வேண்டும்.
கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர். நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர் பாக மொத்தம் 217 மனுக்கள் பெறப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago