அஞ்சல் துறையில் பரஸ்பர இடமாறுதலுக்கு லஞ்சம்- ஒரே நிலை ஊழியரிடம் நிலவும் அவலம்

By எம்.மணிகண்டன்

அஞ்சல் துறை ஊழியர்கள் பரஸ்பர இடமாறுதல் (Mutual Transfer) வேண்டி வேறு ஊரில் பணிபுரியும் ஊழியர்களை அணுகும்போது, அவர்களிடம் சம்பந்தப்பட்ட சில ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவின் பழைமையான துறைகளில் அஞ்சல் துறையும் ஒன்று. இந்தியா முழுவதும் சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் துறைசார் ஊழியர்களும், EDS எனப்படும் கூடுதல் துறை ஊழியர் களும் அடக்கம். தமிழகத்தில் மட்டுமே அஞ்சல் துறையில் 30,000-த்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

வேறு ஊரில் வேலை

இதில் வட்டம், மண்டலம், பிரிவு, இணை என பல்வேறு வகையான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அஞ்சல் உதவியாளர்கள், கணக்கர்கள், பல்பணி ஊழியர்கள் (multi tasking staff) என்று பல மட்டங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அஞ்சல் துறையால் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் மேற்கண்ட பொறுப்புக்கு வரும் இவர்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே நினைத்த இடத்தில் வேலை கிடைப்பதில்லை. இப்படி தேர்வாகும் ஊழியர்கள் வேலை கிடைக்கின்ற ஊரில் உள்ள அலுவலகத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பணிபுரிந்துவிட்டு, அதன்பின்னர்தான் இடமாறுதலுக் காக விண்ணப்பிக்க முடியும்.

பரஸ்பர இடமாறுதல்

இது தவிர பரஸ்பர இடமாறுதல் என்னும் வசதியும் அஞ்சல் துறையில் உள்ளது. அதாவது திருநெல்வேலியில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு சென்னைக்கு இடமாறுதல் வேண்டுமென்றால், அவரைப்போலவே சென்னையில் பணிபுரிந்து கொண்டு திருநெல் வேலிக்கு இடமாறுதல் வேண்டி காத்திருக்கும் ஒருவரை அணுகி இருவரும் பரஸ்பர இடமாறுதல் கோரலாம். அப்படி அவர் ஒப்பு கொள்கிற பட்சத்தில் பரஸ்பர இட மாறுதல் முறைப்படி இருவரும் தங்களது வேலையிடங்களை மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால் இந்த முறையிலும் இப் போது சில முறைகேடுகள் நடப்ப தாகக் கூறப்படுகிறது. சிலர் அவ சரத்துக்காக பரஸ்பர இடமாறுதல் வேண்டி சில ஊழியர்களை அணுகுகிறபோது இடமாறுதல் கோரி வருபவர்களிடம் கணிச மானத் தொகையை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திண்டுக்கல் அஞ்சல் பிரிவின்கீழ் வரும் ஒரு இணை அலுவலகத்தில் பணி புரியும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், “எனக்கு சொந்த ஊர் கோவை பக்கம். தேர்வின் மூலம் அஞ்சல் துறை உதவியாளர் பணிக்கு சேர்ந் தேன். சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. எனது கணவர் சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பரஸ்பர மாறுதல் கிடைத்தால் சென்னைக்கு செல்லலாம் என் நினைத்தேன்.

இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் சென்னை பிரிவில் பணியாற்றுவது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை அணுகிய போது, பரஸ்பர இடமாறுதல் செய்ய வேண்டுமென்றால் ரூ. 1 லட்சம் தரவேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதிக்காமல் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன் என்றார்.

ஏற்கமுடியாது

இது தொடர்பாக அனைத்திந்திய தபால்துறை ஊழியர்கள் கூட்ட மைப்பின் தமிழக மாநில செய லாளர் ஜெ.ராமமூர்த்தியிடம் கேட்ட போது, “சென்னையில் வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு மற்ற ஊர்களில் வேலை செய்பவர் களைக் காட்டிலும் சலுகைகள் அதிகம். எனவே அதை ஈடு செய்யும் விதமாக சிலர் இப்படி செய் யலாம். ஆனால் இதை ஒரு போதும் ஏற்க முடியாது” என்றார்.

நடவடிக்கை உறுதி

இந்தப் பிரச்சினை குறித்து சென்னை வட்ட பொது அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் கூறுகையில், “அஞ்சல் துறையை பொறுத்த வரை பரஸ்பர இடமாறுதல் நினைத்த போதெல்லாம் கிடைக் காது. பரஸ்பர மாறுதலுக்காக விண்ணப்பதாரர் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். மேலும் பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படா மல் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படுவதுடன் லஞ்சம் கேட் கும் ஊழியர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படாமல் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்