சொத்து வரி விலக்கு அளிக்க வலியுறுத்தி தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சொத்து வரி கட்டாத தனியார் பள்ளிகளுக்கு சீல் வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாநிலச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் மற்றும்தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நந்தகுமார் கூறியதாவது: கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. பெற்றோர்களிடம் கல்விக் கட்டணத்தை முறையாக வசூல் செய்ய முடியவில்லை.

ஆனால், அந்த காலங்களுக்கான சொத்து வரியைக் கட்டுமாறு நிர்ப்பந்தம் அளித்து, பள்ளிகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு சொத்து வரி கிடையாது. அரசுப் பள்ளிகளைவிட நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே, 2 ஆண்டுகளுக்கான சொத்து வரியைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்லூரிகளைப்போல தனியார் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பள்ளிகளுக்கு நீண்டகால அங்கீகாரம் வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்மையில், சொத்து வரி செலுத்தாத 200-க்கும் மேற்பட்ட தனியார்பள்ளிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்