சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஃபில் படிப்பு முழுமையாக நீக்கப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நம்நாட்டின் உயர்கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கை-2020 அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து, அதன்வரைவு அறிக்கையை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது.
அதில் 4 ஆண்டுகால இளநிலைபடிப்பை முடித்த பட்டதாரிகள் முதுநிலை பட்டமின்றி பி.எச்டி கல்வியில் நேரடியாக சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23-ம் கல்வியாண்டு முதல் எம்.ஃபில். படிப்புகள் முழுமையாக நீக்கப்படுகிறது. அதேநேரம் இதுவரை வழங்கப்பட்டுள்ள எம்ஃபில் பட்டங்கள் செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் எம்.ஃபில் படிப்பு நிறுத்தப்பட்டுவிட்டன.
அதேநேரம் தமிழகத்தில் உள்ளபல்கலைக்கழகங்களில் எம்.ஃபில்படிப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருவதுடன், மத்திய கல்விக் கொள்கைக்கு எதிரான செயல்பாட்டை தமிழக அரசு முன்னெடுத்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago