பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிவடைந்தது, ரஷ்யா-உக்ரைன் போர் ஆகிய காரணங்களால் 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 22-ம் தேதி உயர்த்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67-க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.93.71-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.27-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.28-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது மக்களை கவலைக்கு உள்ளாக்கிஉள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்