வெளிநாடு செல்லும் முதல்வரை வாழ்த்துவோர் பிரதமரை மட்டும் விமர்சிப்பது ஏன்? - வானதி சீனிவாசன் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: வேலைவாய்ப்பு, தொழில் முத லீட்டை ஈர்க்க வெளிநாட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினை வாழ்த்துவோர், நாட்டின் வளர்ச் சிக்காக பிரதமர் செல்லும்போது மட்டும் விமர்சனம் செய்வது ஏன் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் பாஜக மகளிரணி தேசிய நிர்வாகிகள் கூட்டம் இன்று (மார்ச் 26) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை பாஜக மகளிரணி பேரணி நடை பெற்றது. பேரணியை தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ராஜா திரையரங்கம் அருகே தொடங்கிய பேரணி அண்ணா சாலை வழியாக வந்து கம்பன் கலையரங்கத்தில் முடிந்தது.

தொடர்ந்து அங்கு, ‘மகளிர் மேம்பாட்டில் மத்திய அரசின் பங்களிப்பு’ விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன்கலந்து கொண்டு முன்களப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர் களை கவுரவித்து விருது வழங்கி னார். பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆளுநர் மாளிகை அருகே உள்ள பாரதியார் சிலைக்குமாநில அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்று, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத் துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்பது பெருமை. புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

தென்னிந்தியாவில், கர்நாடகா வுக்குப் பின், புதுச்சேரியில் தேசியஜனநாயக கூட்டணி ஆட்சி பிடித்துள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக் காற்று தமிழகம், ஆந்தி ரம், தெலுங்கானா என்று பல்வேறு பகுதிகளுக்கும் பரவும் காலம் விரைவில் வரும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் வேலை வாய்ப்பு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளி நாடு செல்வதாக, பலர் வாழ்த்துச் சொன்னார்கள்.

இதே நோக்கத்தில், பிரதமர் மோடியும் பல்வேறு நாடுகளுக்குச் சென்றபோது, இவர்கள் விமர் சித்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலி னும், பல நாடுகளுக்கும் செல்ல வேண்டும், அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே முதல்வர் மு.க. ஸ்டாலின் யோசிப்பதாக சொல்கிறார்கள். அதே போல், ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி செயல்படுகிறார். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசிய ஒற்று மைக்கு எதிராக பேசுவது, செயல்படுவதையே அவர்கள் குறிக் கோளாக வைத்திருப்பது வேதனை யாக உள்ளது.

பாலியல் ரீதியான குற்றங்க ளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. பொள்ளாச்சி சம்பவத்தின்போதும் கடுமையாக நடவடிக்கை வேண்டுமென முதல் முறையாக மனு அளித்து வலியுறுத்தினேன். பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் புகார் கொடுக்க முன்வராமல் இருப்பதற்கு நம்முடைய சமுதாயத்தில் இருக் கின்ற பல்வேறு விஷயங்களை நாம் மாற்றியாக வேண்டும்.

தமிழக சட்டப் பேரவையில், பெண் உறுப்பினர்களுக்கு தனி இருக்கை வழங்க வேண்டுமென, நான் பேரவைத் தலைவரிடம் வலியுறுத்திப் பேசினேன்.

முதலில் நாம் பாலின சமத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றம் சட்டப் பேரவையிலிருந்தே வர வேண்டும். பாலின சமத்துவம் அனைத்து இடங்களிலும் வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்